இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு..!

  0
  2
  Sourav ganguly

  பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரை நியமிப்பதற்கான கூட்டம் மும்பையில் உள்ள ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

  பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரை நியமிப்பதற்கான கூட்டம் மும்பையில் உள்ள ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் பி.சி.சி.ஐ தலைவரான சீனிவாசன் பி.சி.சி.ஐ இன் புதிய தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேலை பரிந்துரை செய்தார். ஆனால், அதனை கிரிக்கெட் சங்கங்கள் ஏற்கவில்லை. அதனால், கடைசியாக சௌரவ் கங்குலி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 

  Sourav Ganguly

  மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளான இன்று, சௌரவ் கங்குலியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வரும் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சௌரவ் கங்குலி, ஐ.பி.எல் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக 16 வருடங்களாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கங்குலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.