இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை

  0
  11
  virat kohli

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

  மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ஆனால் இம்முறை அவரது சாதனை கிரிக்கெட் மைதானத்தில் நிகழவில்லை. இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பாளர்களை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் (அதாவது 5 கோடிக்கு பேருக்கு மேல்) பின்தொடர்கின்றனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் 49.9 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் விராட் கோலியின் எண்ணிக்கைக்கு மிக நெருக்கமாக உள்ளார்.

  ttn

  சொந்த பதிவுகள் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் விளம்பர பதிவுகள் இடுவதன் மூலமாகவும் விராட் கோலி சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கும் சுமார் 1.87 கோடி வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 930 பதிவுகள் இட்டுள்ளார். மேலும் 148 பேரை இன்ஸ்டாகிராமில் அவர் பின்தொடர்கிறார். தற்போது விராட் கோலி இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பிசியாக உள்ளார்.