இந்திய அணி தோல்வி: பிரபலங்களின் ரியாக்ஷன்!  

  0
  3
  தோனி 

  இந்திய அணி தோல்வி குறித்து திரை நட்சத்திரங்கள் கருத்து பதிவு செய்துள்ளனர். 

  சென்னை: இந்திய அணி தோல்வி குறித்து திரை நட்சத்திரங்கள் கருத்து பதிவு செய்துள்ளனர். 

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் நேற்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. அதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர்  ஆட்டமிழந்தனர். பின்பு ஜடேஜா, தோனி கூட்டணியில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. 

  இருப்பினும் இந்திய அணி போராடித் தோல்வியடைந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.