இந்திய அணி இவர்களால் தான் வெற்றியை பெற்றது – கேப்டன் கோஹ்லி புகழாரம்!

  0
  7
  kohli

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கு இந்த வீரர்கள் சிறப்பாக ஆடியது தான் காரணம் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கு இந்த வீரர்கள் சிறப்பாக ஆடியது தான் காரணம் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் மைதானத்தில் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. 

  virat

  இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 96 ரன்களும், விராட் கோலி 78 ரன்களும் எடுத்தனர். ஐந்தாவது வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே எல் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் அடித்திருந்தார். 

  rahul

  அடுத்ததாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

  முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றதால் தற்போது வரை இந்த தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இறுதி போட்டி, வருகிற 19ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. 

  virat

  இரண்டாவது போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணியில் இந்தந்த வீரர்கள் சிறப்பாக ஆடியது வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது என சில வீரர்களை குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார்.

  அவர் பேசுகையில்,

  “இன்றைய போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டது பெருமிதம் அளிக்கிறது. குறிப்பாக, ஷிகர் தவான் காயத்திலிருந்து மீண்டு வந்து இரண்டு போட்டிகளில் ஆடிய விதம் அணிக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தருகிறது.

  dhawan

  ஆனால், இன்றைய போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கி கேஎல் ராகுல் ஆடிய விதம் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என நான் கூறுவேன். அவரைப்போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரரை வெளியில் அமர்த்துவது எனக்கு தவறென தெரிகிறது. துவக்க வீரராக சரி, மிடில் ஆர்டரிலும் சரி, கீழ் வரிசையிலும் சரி அனைத்து இடத்திலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.” என விராட் கோலி பேசினார். 

  இதன்மூலம் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது கேஎல் ராகுல் தான் என விராட் கோலி குறிப்பிடுவது தெரிகிறது.