இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி.,XI அணி 356 ரண்கள் குவிப்பு

  0
  5
  australiacricket

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் மூன்றாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய வாரிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரண்கள் எடுத்துள்ளது

  -குமரன் குமணன்

   

  சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் மூன்றாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய வாரிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரண்கள் எடுத்துள்ளது.

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

  இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அதில், இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்கள் குவித்தது.

  teamindia

  இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் அட்டம் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய வாரிய அணி வீரர்களின் தொடக்க இணை ,114 ரண்கள் வரை நீடித்தது .மேக்ஸ் பிரையன்ட் விக்கெட்டை கைப்பற்றி ,தொடக்க ஜோடியை பிரிந்தார் அஷ்வின் .பிரையன்ட 62 ரண்களில் (65 பந்துகளில் 9 பவுண்டரிகள் ) வெளியேறினார். ஸ்கோர் 153 ரண்களாக இருந்தபோது 91 பந்துகளில் 74 ரண்கள் எடுத்திருந்த டார்ஸி ஷார்ட் ,ஷமி பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

  அடுத்ததாக கேப்டன் சாம் ஒயிட்மேன் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார் .ஒயிட்மேன் 55 பந்துகளில் வெளியேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே ஜேக் கார்டரின் விக்கெட் வீழ்ந்தது. இதையடுத்து, அணி விரைவில் ஆல் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையியல், விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சன் மற்றும் ஆரோன் ஹார்டி ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. நீல்சன் 56 ரண்களுடனும், ஹார்டி 69 ரண்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய வாரிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரண்கள் எடுத்துள்ளது .இது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எடுத்ததை விட ,இரண்டு ரண்கள் குறைவானதாகும்.

  ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் , இந்த குறிப்பிட்ட ஆட்டம் டிராவில் முடியும் சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளன. ஆனால், ஒரு பயிற்சி ஆட்டத்தில் அனுபவமற்ற எதிரணியிடமே மிக சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்திய அணி ,பலம் மிகுந்த ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதும், தற்போதைய சூழலில் சற்றே ஆற்றல் குறைந்து காணப்படும் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த எந்த வகையான வியூகங்களுடன் இந்திய அணி செயலாற்ற போகிறது என்பதும் மிகப்பெரிய கேள்விகளாக எழுந்துள்ளது.

  prithvishaw

  இதனிடையே, இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரித்வி ஷா, வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.