இந்திய அணியின் தோல்விக்கான ஐந்து முக்கிய காரணங்கள் !!

  0
  1
  இந்திய அணி

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நூழிலையில் வெற்றியை தவறவிட்டு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 
  இந்திய அணியின் தோல்விக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நூழிலையில் வெற்றியை தவறவிட்டு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 
  இந்திய அணியின் தோல்விக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
  அந்த வகையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களாக பெரும்பாலான கிரிக்கெட் விமர்ச்சககர்கள் முன்வைக்கும் ஐந்து முக்கிய காரணங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். 

  dinesh karthick

  1-    கடந்த போட்டியில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவு தான் என்று சொல்ல வேண்டும், அந்த இடத்தில் இளம் வீரர் யாருக்காவது இடம் கொடுத்திருக்கலாம் அல்லது முகமது ஷமியை அணியில் எடுத்திருக்கலாம். 

  virat and rohit

  2-    கே.எல் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தங்களது பொறுப்பை உணராமல் பந்தை சரியாக கூட கணிக்காமல் வெறும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தது. முன்று முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மென்களுக்கும் கடும் நெருக்கடியை கொடுத்தது. 

  pant and pandiya

  3-    பொறுமையாக விளையாட வேண்டிய நேரத்தில் ரிஷப் பண்ட் நிறைய தவறான ஷாட்களை அடித்தது. அது அவரது அனுபவமின்மையை காட்டினாலும் அவரை போலவே ஹர்திக் பாண்டியாவும் பொறுப்பற்று விக்கெட்டை இழந்தது மிக முக்கிய காரணம்.

  dhoni

  4-    இக்கட்டான நேரத்தில் பொறுப்பாக விளையாடக்கூடிய தோனியை நான்காவது இடத்தில் களமிறக்காமல் கடைசியாக ஏழாவது இடத்தில் களமிறக்கியதே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

  dhoni

  5-    அடித்து கொடுக்க வேறு ஆளே கிடையாது பவுண்டரி அல்லது சிக்ஸர் தான் அடித்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், தோனி தேவை இல்லாமல் ரன் ஓட நினைத்து வெறும் ஒரு ரன்னிற்காக விக்கெட்டை இழந்தது தான் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவையையும் தகர்த்தெறிந்தது.