இந்திய அணியின் டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்கவுள்ள அமித்ஷா!

  0
  7
  அமித்ஷா

  இந்திய அணியின் டெஸ்ட் போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் கண்டுகளிக்க உள்ளார். 

  பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலியின் முயற்சியால், வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ள இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் ஒரு மணிநேரம் நடக்கும் இந்த போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் கண்டுகளிக்கவுள்ளார். அவருடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பார்வையிடவுள்ளனர். 

  அமித்ஷா

  மேலும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட விளையாட்டு வீரர்களான அபிநவ் பிந்த்ரா, மேரி கோம், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது