இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கும் ‘தல’ தோனி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

  0
  1
  தோனி

  நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

  மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

  ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, வருகின்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. அந்த தொடரில் ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

  dhoni

  அந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு முன் இந்தியா எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் இந்திய அணியில் இடம்பெறாத தோனிக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  அதன்படி, ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

  அதேபோல், டி20 போட்டிக்கான வீரர்களின் பட்டியலில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.