இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியை நேரில் குடும்பத்துடன் கண்டுகளித்த பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

  0
  1
  team india

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகள் மோதின.

  உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளின்  நேற்றைய ஆட்டத்தை நடிகை ராதிகா குடும்பத்துடன் கண்டுகளித்துள்ளார். 

  ind

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகள் மோதின. இங்கிலாந்தின்  மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களும் தோனி 56 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும்  இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 11 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

  இந்நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியை தங்கள் மகனுடன் சரத்குமார்-ராதிகா ஜோடி நேரில் கண்டு ரசித்தனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகை ராதிகா தனது  டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அதில் போட்டி சிறந்த அனுபவமாக இருந்தது. எல்லா இடங்களிலும் நம் நாட்டு கொடி,  ரசிகர்கள்  கூட்டம். கேப்டன் தோனி கேட்ச் அற்புதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.