இந்தியா முழுவதும் மதுவிலக்கு! பிரதமருக்கு கோரிக்கை வைத்த 10 வயது சிறுவன்!

  14
  liquor prohibition

  இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும் என்று பிரதமர் மோடிக்கு 10 வயதான சிறுவன் ஆகாஷ் ஆனந்தன் கடிதம் எழுதியிருக்கிறான். இது குறித்து நிருபர்களிடம் பேசிய சிறுவன் ஆகாஷ், கடந்த 3 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்.

  akash

  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மட்டுமே முழுமையான மது விலக்கு சாத்தியம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அத்துடன் 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்களின் அபாயங்கள் குறித்து விரிவான பாடமும் இடம் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்தான்.