இந்தியா- பாகிஸ்தான் மோதும் பரபரப்பான போட்டி! நடுவில் மழை ஆட்டத்தை காட்டுமா… அப்ப மேன் ஆஃப் தி மேட்ச் ‘மழை’

  0
  2
  Fire

  உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முன் ‌எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

  உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முன் ‌எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

  நடப்பு உலகக்கோப்பை தொடரில் மழையால் பெரும்பாலான ஆட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட மைதானம் என்றில்லாமல், பெரும்பாலான மைதானங்களில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இது புள்ளிகள் பட்டியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அணிகளின் ஃபார்மிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கைவிடப்படும் போட்டிகளில், புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலும், பலம்‌வாய்ந்த அணிகளுக்கு இது பெரும் பின்னடைவாக அமைகிறது. கடந்த 4 ஆம் தேதி கார்டிஃப்பில் நடைபெற்ற இலங்கை – ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டி தான் முதல் முறையாக மழையால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் அப்போட்டி கைவிடப்படாமல் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாட்டப்பட்டது. 
  கடந்த 7 ஆம் தேதி பிரிஸ்ட்டோலில் அட்டவணையிடப்பட்டிருந்த பாகிஸ்தான் -இலங்கை அணிகள் இடையிலான போட்டி டாஸ் போடப்படாத நிலையிலேயே கைவிடப்பட்டது. 

  சவுத்ஹாம்ப்ட்டனில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்ரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 8 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 11 ஆம் தேதி பிரிஸ்ட்டோலில் நடைபெறவிருந்த இலங்கை -பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி , ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – நியூசிலாந்து போட்டியும், டாஸ் போடாத நிலையிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் – இந்தியா போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் மழை நாளை குறுக்கே புகுந்து ஆட்டத்தை நடத்துமா அல்லது ஆட்டத்திற்கு வழிவிட்டு நகருமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.