“இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்” – சீனா வலியுறுத்தல்!

  0
  3
  இந்தியா-பாகிஸ்தான்

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நல்ல நட்புறவுடன் கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  ஆசிய துணை கண்டங்களில் அமைதியையும், நல்ல நட்புறவையும் நிலைநாட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நட்புறவை மேற்கொண்டு கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் சுன் வெயிடங் தெரிவித்துள்ளார்.

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நல்ல நட்புறவுடன் கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  ஆசிய துணை கண்டங்களில் அமைதியையும், நல்ல நட்புறவையும் நிலைநாட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நட்புறவை மேற்கொண்டு கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் சுன் வெயிடங் தெரிவித்துள்ளார்.

  modi

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருவருக்கும் இடையே நடந்த முறைசாரா பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவிற்கான சீன தூதர் கூறுகையில், “ஆசிய துணை கண்டங்களில் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் மிகவும் தாக்கம் கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்த, இப்பகுதி நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல நட்புறவை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், இந்த ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கடும் எதிர்ப்பு வெடித்தது. இதில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரமடைந்த இந்தியா, பதில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒப்புக்கொண்டது. இது இந்தியாவை மேலும் தூண்டும் விதமாகவும் குறிப்பிடத்தக்கது.

  அதன் பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பல நாட்டு ஆதரவுகளை திரட்ட முயற்சித்த போதும், சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றதால், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிகழ்வும் இந்தியா பாகிஸ்தான் இடையே மேலும் பிரிவை ஏற்படுத்தியது.

  india china

  இதையும் குறிப்பிட்டு பேசிய சீன தூதர் கூறுகையில், “காஷ்மீரை மீட்டெடுக்க சீனாவிடம் ஆதரவு கோரி கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர்களது ராணுவப் படை தலைவர் இருவரும் சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிகழ்வு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற ஒன்று” என்றார்.

  “மேலும், சீன அதிபர் வருகைக்குப் பிறகு சீனாவிற்கு இந்தியாவுடனான நட்பு அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா கூட்டுறவு மென்மேலும் தொடர விரும்புகிறேன். அதேபோல் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இருநாட்டு நட்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்த சீனா முடிவு செய்திருக்கிறது” என்றார்.

  -vicky