இந்தியா ‘டாஸ்’ வின்.. முதலில் பேட்டிங்!

  0
  1
  தென் ஆப்பிரிக்க அணி-இந்திய அணி

  விசாகபட்டினம் மைதானத்தில்  நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விசாகபட்டினம் மைதானத்தில்  நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது. 

  mATCH

  இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். 

  இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 மாற்றங்களுடன் களம் இறங்குகிறது. துவக்க வீரர் மார்க்ரம் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டார். அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் பிலாந்தர் ஆல்ரவுண்டர் மகாராஜா மற்றும் முத்துசாமி ஆகியோர் வெளியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுடன் பேட்ஸ்மேன் டி புரெயின் வெளியில் அமர்த்தப்பட்டார். இவர்களுக்கு பதிலாக ஹம்சா, கிளாசன், லுங்கி ங்கிடி மற்றும் பியட் ஆகியோர் அணியில் எடுத்து வரப்பட்டுள்ளனர். 

  இன்றைய போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. வேகப்பந்துவீச்சாளர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்த சற்று தடுமாறிய இஷாந்த் சர்மா வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக சபாஷ் நதிம் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார்.

  இன்றைய போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்

  match

  மயான்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, விராத் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமன் சாஹா (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷபாஸ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி

  இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் பட்டியல்

  டீன் எல்கர், குயின்டன் டி கோக், ஜுபைர் ஹம்ஸா, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசென் (கீப்பர்), ஜார்ஜ் லிண்டே, டேன் பியட், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி ங்கிடி.