இந்தியாவை காப்பாற்றிய விடுதலை புலிகள்; ஜெனிவாவில் கருணாஸ் உரை!

  0
  1
  கருணாஸ்

  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40-வது கூட்டத்தொடரில் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்

  ஜெனிவா: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40-வது கூட்டத்தொடரில் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

  சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் இலங்கை விவகாரம் மற்றும் அந்நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்த கூட்டத்தில் தமிழர்கள் தரப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், இலங்கை கடற்பரப்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரை இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. அதனை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்றார்.

  jayalalithaa

  சட்ட மன்றத்தில் முன்னாள் மறைந்த முதலமச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானத்தை குறிப்பிட்டு பேசிய கருணாஸ், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். தொடர்ந்து நாங்கள் சட்டப்பேரவைக்குள்ளும் வெளியேயும் போராடி வருகிறோம். ஆனால், இந்திய அரசு எங்களது உணர்வுகளை மதிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

  மேலும் பேசிய கருணாஸ், சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும். இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

  genocide

  கடந்த 2009-ஆம் நடைபெற்ற இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகம் தங்களது கடமையில் இருந்து தவறியதை யாரும் மறுக்க முடியாது என தெரிவித்த கருணாஸ், போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும். இதற்காக இலங்கைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தினார்.