இந்தியாவை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது! இது கொரோனாவுக்கு எதிரான நீண்ட போர்- மோடி

  0
  2
  மோடி

  கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி காணொலி மூலம் தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, முகத்தை உரிய முறையில் மூடிக் கொள்வதோடு, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

  modi

  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாட்டு மக்கள் பொறுப்புடன் நடந்து வருகின்றனர். பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், நல்ல நிர்வாகத்திலும், ஏழைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறது. த்திலும், ஏழைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறது. 130 கோடி இந்திய மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு நாம் பார்த்திருப்போம். கொரோனாவுக்கு எதிரான இது ஒரு நீண்ட போர். ஆனால் அதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது” என தெரிவித்தார்