இந்தியாவுல இன்னும் 5ஜி-க்கே வழியில்ல… அதுக்குள்ள இந்த நாட்டுல 6ஜி வரப்போகுதா?

  15
   6ஜி

  சீனாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணியை அந்நாட்டு அரசு குழுக்கள் அமைத்து துவங்கியிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் இந்தியாவை கிண்டலடித்து வருகின்றனர்.

  சீனாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணியை அந்நாட்டு அரசு குழுக்கள் அமைத்து துவங்கியிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் இந்தியாவை கிண்டலடித்து வருகின்றனர்.

  உலகின் பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவில் 5ஜி சேவை வெளிவந்து முற்றிலுமாக ஒருமாத காலம் முடிவுராத நிலையில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அந்நாட்டு அரசு துவங்கி இருக்கிறது. இந்த செய்தி வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  china

  இந்தியாவில் தற்போது வரை 4ஜி சேவை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை அளிப்பதற்கான பணியை துவங்கி செயல்படுத்தி வருகிறது. உலகில் 5ஜி சேவை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இருக்கிறது.

  இந்நிலையில் சீனாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி தொழில்நுட்ப சேவைக்கு இரண்டு குழுக்களை அமைத்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. முதல் குழுவில் அந்நாட்டு அரசின் அறிவியல் வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது குழுவில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள்/பேராசிரியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

  china

  கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிவிட்டதாக அறிவித்தது. எனினும், இது வெறும் துவக்க பணிகள் தான் என்பதால் 6ஜி வணிக மயம் பெற இன்னும் நீண்ட காலம் ஆகும்.