இந்தியாவுடான வர்த்தகத்தை ரத்து செய்ததால், உயிர் காக்கும் மருந்துகளுக்காக திண்டாடும் பாகிஸ்தான்…..

  14
  மருந்துகள்

  இந்தியாவுடான வர்த்தகத்தை ரத்து செய்ததால், பாகிஸ்தானில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவுடான பரஸ்பர வர்த்தகத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

  இம்ரான் கான்

  இந்தியாவுக்கு ஆப்பு வைப்பதாக நினைத்து கொண்டு தன் சொந்த மக்களுக்கே ஆப்பு வைத்து விட்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்திய மருந்து நிறுவனங்கள் பல உயிர்காக்கும் மருந்துகளே பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கின்றன. தற்போது பாகிஸ்தான் வர்த்தக உறவை ரத்து செய்வதாக கூறியதால் அந்நாட்டுக்கான மருந்து பொருட்கள் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.

  ஏற்றுமதிக்கு தயாரான மருந்து பொருட்கள்

  மேலும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி  செய்யப்பட்ட மருந்து பொருட்கள் அந்நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் டெலிவரி செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு மருந்து சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் நோயாளிகள் கடும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்த அந்நாட்டு வர்த்தக கூட்டமைப்பு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள இந்திய மருந்துகளை விநியோகம் செய்ய நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.