இந்தியாவுக்கு எதிரான முதல் டி20; ஆஸ்திரேலிய அணி வெற்றி

  0
  11
  வெற்றி களிப்பில் ஆஸி., வீரர்கள்

  இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது

  -குமரன் குமணன்

  விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

  இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இருபது ஓவர் தொடரின் முதல் போட்டி, விசாகபட்டித்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்த ஆஸ்திரேலியா, அந்த முடிவுக்கு முழு நியாயம் செய்யும் வகையில் இந்திய அணியை, 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தியது.

  லோகேஷ் ராகுல் 50(36) 6×4 1×6, கோலி 24(17) 3×4 ,தோனி 29(37) 1×6 என மூன்றே பேர் தான் இரட்டை இலக்கத்தை தொட்டவர்கள். முதல் 10 ஓவர்களில் 80-3 என்றிருந்த ஸ்கோர், அதன் பிறகு வீ்ழ்ச்சியை சந்தித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக குல்டர் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

  எளிமையான இலக்கை  துரத்தி, தெளிவாக பயணித்த ஆஸ்திரேலிய அணிக்கு  89/3 (13.3) என்கிற நிலையிலிருந்து சரிவு ஏற்பட்டபோதும், கடைசி ஓவரில் தேவைப்பட்ட 14 ரன்களை, கடைசி பந்து வரை எதிர்கொண்டு எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எட்டியது.

  மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேதன் குல்டர் நைல் ஆட்ட நாயகன் ஆனார்.

  2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு இந்தியா அடுத்தடுத்து இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் தோற்பது இப்போது தான். இரண்டாவதும் கடைசியுமான போட்டி வரும் புதன்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை சமன் செய்ய முடியும்.