இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. உ.பியில் 3,350 டன் தங்க படிமங்கள் கொண்ட 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு !

  0
  6
  தங்க சுரங்கங்கள்

  இந்திய புவியியல் ஆய்வு மையம் பல ஆண்டுகளாக தங்க சுரங்கங்களை கண்டுபிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

  இந்திய புவியியல் ஆய்வு மையம் பல ஆண்டுகளாக தங்க சுரங்கங்களை கண்டுபிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அதற்கு பலன் அளிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா என்னும் பகுதியில் இரண்டு மடங்கு பெரிய தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  ttn

  இந்த ஆய்வை  உத்தரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகமும் சேர்ந்து நடத்தியுள்ளது. இந்தியாவின் கையிருப்பில் இப்போது 626 டன் தங்கமே இருக்கும் நிலையில், இந்த சுரங்கங்களில்  3,350 டன் தங்க படிமங்கள் இருப்பதாக முதல் கட்ட ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இப்போதுள்ள கையிருப்பு தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் ஆகும். 

  ttn

  இந்த தங்க சுரங்கங்களில் தங்கம் மட்டுமில்லாது, இரும்பு, பொட்டஷ் போன்ற தாது பொருட்களும் இருக்கின்றனவாம். தற்போதைய தகவலின் படி, அமெரிக்கா- 8133.5 டன் தங்கம்,  ரஷ்யா-2241.9 டன் தங்கம், ஜெர்மனி-3366 டன் தங்கம், சீனா -1948.3 டன் தங்கம் வைத்துள்ளன.

  ttn

  உத்திரபிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சுரங்கங்களின் மூலம் வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா உருவாகும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதன் மூலம் மாநில வேலை வாய்ப்பு அதிகமாகும் என்றும் அரசின் வருவாய் பல மடங்கு அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.