இந்தியாவில் பென்லி நிறுவனத்தின் லியோன்சினோ-500 ரக பைக்குகள் அறிமுகம்!!  ஆரம்ப விலை எத்தனை லட்சம் தெரியுமா?

  0
  3
   பென்லி நிறுவனம்

  மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான பென்லி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லியோன்ஸினோ 500 ரக பைக்குகளை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

  உலகின் பழமையான மோட்டார் வாகனம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பென்லி ஒவ்வொரு ஆண்டும் பல வடிவமைப்புகளுடன் கூடிய மோட்டார் பைக்குகளை சந்தையில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

  benilli 500

  பென்லி நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிஆர்கே 502 என்கிற ரக பைக்குகளை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த ரக பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் பயனாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

  இந்நிலையில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகியுள்ள லியோன்ஸினோ ரக பைகளிலும் இதே என்ஜினை பென்லி நிறுவனம் பொருத்தியுள்ளது.

  இதில் 500சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. 47.5 பி.எஸ். 8500-rpm செயல்திறனையும் மற்றும் 445-Nm டார்க் @5000 rpm  செயல்திறனையும் வழங்குகிறது. மேலும் இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்புறம் 50 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர் ஆகியனவும் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

  benelli 500

  பிரேக்கிங்கிற்கு முன்புறம் மற்றும் பின்புறத்தில் 320 எம்.எம். ட்வின் டிஸ்க் செட்டப் மற்றும் 260 எம்.எம். டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பென்லி லியோன்சினோ 500 மாடல் கவாசகி z650, சி.எஃப்.மோட்டோ 650NK உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக ஆட்டோமொபைல் சந்தையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  குறைந்தபட்ச முன்பதிவு கட்டணமான ரூ. 10,000 செலுத்தி இந்த ரக பைக்குகளை பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகள் வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.

  டெல்லியில் இந்த ரக பைக்குகளுக்கு எக்ஸ் ஷோரூம் விலையாக 4.76 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.