இந்தியாவில் ஜூன் வரை கொரோனா… செப்டம்பர் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்! – ஆய்வு நிறுவனம் கருத்து

  0
  1
  Maharashtra health minister

  மகாராஷ்டிராவில் ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்தியா முழுக்க ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  மகாராஷ்டிராவில் ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்தியா முழுக்க ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக உள்ளது. சமூக பரவல் என்ற நிலையை அடையவில்லை என்று அரசுகள் கூறினாலும் பரிசோதனைகள் செய்யப்படும் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், எதன் அடிப்படையில் சமூக பரவல் இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  lockdown-kerala-89

  இந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வௌியாகி வருகின்றன. மகாராஷ்டிராவில் ஊரடங்கை நீட்டிக்க திட்டமிட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
  உலக அளவில் கொரோனா பாதிப்பு பற்றி அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

  corona-researchers

  அது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை காரணமாக தற்போதைக்கு ஊரடங்கை தளர்த்துவதற்கு வாய்ப்பு குறைவு. ஜூன் மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் 2வது வாரம் வரையிலான காலக்கட்டம் வரை படிப்படியாக ஊரடங்கு நீக்கப்படலாம். இந்தியாவில் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் வரை கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.