இந்தியாவில் சிறு தொழிலதிபரும் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாக முடியும்….. முகேஷ் அம்பானி

  0
  4
  முகேஷ் அம்பானி

  இந்தியாவில் சிறு தொழிலதிபர் அல்லது தொழில்முனைவோரும் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாக சாத்தியம் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

  மும்பையில் நேற்று எதிர்கால டிகோடட் தலைமை செயல் அதிகாரிகள் (சி.இ.ஓ.) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளாவுடன் கலந்துரையாடும் போது முகேஷ் அம்பானி கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு சிறு தொழிலதிபர் அல்லது தொழில்முனைவோர் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாகும் சாத்தியம் உள்ளது.

  சத்ய நாதெள்ளா

  50 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை திருபாய் அம்பானி ஒரு டேபிள், சேர் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை ஒரு தொடக்க நிலை நிறுவனமான நிறுவினார். இந்தியா அடிமட்டத்தில் வைத்திருக்கும் தொழில்முனைவோர் சக்தி மகத்தானது. நம் நாட்டை பொறுத்தவரை சிறு குறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் நாட்டின் 70 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை இயக்குகின்றன. மற்றும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுககும் முக்கியமானவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். 

  கோகிலாபென் அம்பானி

  இந்தியாவில்(டிஜிட்டல்) பயன்பாடு அதிகரித்து விட்டது மற்றும் டிஜிட்டல் இந்தியா மக்களின் இயக்கமாக மாறி விட்டது. 85 வயதான எனது அம்மாவும் (கோகிலாபென் அம்பானி)  டேட்டா அதிகம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் ஒருவராக இருந்தார். மற்றும் தொழில்நுட்பத்தில் தீவிரம் மற்றும் ஏற்றுக்கொள்பவராக இருந்தார். ஜியோவின் வருகைக்கு முன் 1 ஜி.பி. டேட்டா விலை ரூ.300-500 என்ற அளவில் இருந்தது. ஜியோவின் வருகைக்கு பிறகு 1 ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.12-14 என்ற அளவில் குறைந்தது. எதிர்காலத்தில், மியுசிக், டி.வி., சினிமா ஆகியவற்றை காட்டிலும் கேமிங் மிகப்பெரிய வளர்ச்சி காணும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.