இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு! 27 பேர் உயிரிழப்பு!!

  0
  6
  கொரோனா

  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

  கொரோனா வைரஸ்

  உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆக அதிகரித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 6 லட்சத்து 84 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 1 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1120 ஆக உயரந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.