இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 43-ஆக அதிகரிப்பு

  0
  6
  coronavirus

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது.

  டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது.

  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. நேற்றுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த நிலையில், புதிதாக 4 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  ttn

  கடந்த செவ்வாய்க்கிழமை வரை இந்தியாவில் வெறும் 6 பேருக்கு மட்டும் தான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 43 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் பல வழிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.