இந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு!

  0
  2
  கொரோனா

  இதுவரை உலகம் முழுவதும் 15லட்சத்து 11ஆயிரத்து104  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 88,338 பேர் பலியாகி  உள்ளனர்.

  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 15லட்சத்து 11ஆயிரத்து104  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 88,338 பேர் பலியாகி  உள்ளனர்.

  கொரோனா வைரஸ்

  அதே சமயம் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

  கொரோனா

   இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. 
  அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக  அதிகரித்துள்ள நிலையில்  473 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.