இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு – இத்தாலி சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

  0
  1
  coronavirus

  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

  ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை நான்காக இருந்தது. தற்போது இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

  ttn

  இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி 69 வயதான ஆன்ரி சார்லி கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.