இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிகமாகிக் கொண்டே வருகிறது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  0
  2
  முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

  கொரோனா வைரஸ் குறித்து இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய பணத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி கிடைத்துள்ளது என்று கூறினார். 

  ttn

  தொடர்ந்து, கொரோனா அதிகமாக பரவி வருவதால் தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா சிகிச்சைக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்த்து மொத்தம் 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. என்று கூறினார். இதனையடுத்து, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும்  21 நாட்களுக்கு பிறகு கொரோனாவின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித்தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். 

  மேலும், பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு நிவாரண நிதி ரூ.1000 வழங்கப்படும் என்றும் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே நிவாரண நிதியான 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.