இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 4,314 ஆனது

  0
  1
  Coronavirus

  கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 70ஆயிரத்து 513பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 12 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 71ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

  கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 70ஆயிரத்து 513பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 12 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 71ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  118ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  693  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 4,314 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 76% பேர் ஆண்கள், 24% பெண்கள் என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.