இந்தியாவில் உயிருக்கு ஆபத்து… ஐநா சபையை நாடும் நித்தியானந்தா

  0
  1
  நித்தியானந்தா

  இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம்  உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார். 

  இந்தியாவில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் கைலாசம் என்ற  தனது புதிய நாட்டுக்கு அங்கீகாரம் கோரி நித்தியானந்தா ஐநா.சபையை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  nithi

  நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியதுடன்  ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா  ஈடுபட்டு வருகிறார்.  

  ttn

  இதற்காக அவர்  தென்அமெரிக்க நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கியதாகவும்,  அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும்  இந்து மதத்தைப் பின்பற்றும்  யார் வேண்டுமானாலும்  கைலாசா  நாட்டின் குடியுரிமையைப் பெறலாம் என்றும்  கூறியுள்ளார். இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம்  உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார். 

  un

  இந்நிலையில் நித்தியானந்தா இமயமலையில்  பதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரின் சட்ட ஆலோசகர்கள் ஆலோசனைப்படி, கைலாசா என்ற தனிநாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இந்தியாவுக்குத் திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தனிநாடு அமைத்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக அவர் ஐநா சபையில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.