இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள தனியார் ரயில் சேவை: அசத்தும் சிறப்பம்சங்கள்!

  0
  2
  தேஜாஸ் எக்ஸ்பிரஸ்

  லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் இந்த ரயிலுக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது

  இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் ரயில்வே துறை முதன்முறையாகத் தனியார் நிறுவனத்தின் ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் இந்த ரயிலுக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயிலை வரும் 4 ஆம் தேதி  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் துவக்கி வைக்கிறார். 

  tejas

  ரயிலின் சிறப்பம்சங்கள்:
  • லக்னோ முதல் டெல்லி வரையிலான 554 கி.மீ தூரத்தை இந்த ரயில் 6.15 நிமிடங்களில் கடக்கும். அதாவது காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.25 மணிக்கு டெல்லியை அடையும். அதேபோல் மாலை 4.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு லக்னோவை வந்தடையும்.  
  • 56 இருக்கைகள்  கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஒரு ஏசி கம்பார்ட்மெண்ட்டும்,  78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி கம்பார்ட்மெண்ட் உள்ளன. மேலும்  ஏசி அல்லாத கம்பார்ட்மெண்ட்டுகளை  சேர்த்து மொத்தம் மொத்தம் 758 இருக்கைகள் ரயிலில் உள்ளன. 
  • கான்பூர் செண்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிற்கும்.

  train

  டிக்கெட் முன்பதிவு 
  • வாரத்தில் 6 நாட்கள் ரயில் இயக்கப்படும். செவ்வாய்க் கிழமை ரயில் சேவை கிடையாது. 
  • ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை  பெற முடியும். நேரடியாக வாங்க முடியாது. 
  • டிக்கெட் முன்பதிவானது 60 நாட்கள் முன்பே செய்யவேண்டும். டிக்கெட் விலையானது இன்னும் அறிவிக்கப்படவில்லை.