இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்… அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்!

  6
  கனடா

  குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தன்னுடைய குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.

  குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தன்னுடைய குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.

  flag

  குடியுரிமை சட்டத் திருத்தம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகிறது. அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தவர்களின் ஊடுறுவலுக்கு எதிராக அஸ்ஸாம் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். தற்போது ஊடுறுவிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வடகிழக்கு மாநில மக்கள் கூறுகிறார்கள்.

  cab

  இந்த போராட்டங்கள் காரணமாக குவாஹத்தியில் நடைபெற இருந்த இந்திய – ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. போராட்டம், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டுக் குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரக்கைவிடுத்துள்ளன. நிலைமை சீரடையும் வரை அங்கு செல்ல வேண்டாம், கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெற்று செல்லும்படி கூறியுள்ளன.