இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் : தாயின் போராட்டத்தால் சாத்தியமான கனவு!

  0
  8
   அன்பு ரூபி

  மகன் மகளாக மாறியதைக்  கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறி வியக்க வைக்கிறார். 

  சமுதாயத்தின் புறக்கணிப்பு, கேலி கிண்டல்கள், பெற்றோரே வீட்டைவிட்டுத் துரத்தும் அவலநிலை போன்ற பல துயர சம்பவங்கள்  தான் திருநங்கைகளின்  பாதையை தீர்மானிக்கிறது. அந்த வகையில் மகனாக பிறந்து உடலில் ஏற்படும் மாற்றங்களால் மகளாக மாறிய ஒரு பிள்ளையின் மனநிலையை உணர்ந்து ஒரு தாய் எடுத்துள்ள  மிகப்பெரிய முயற்சியால் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை தன்  வசம் தக்கவைத்துள்ளார் அன்பு ரூபி.

  ttn

  தூத்துக்குடி, சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி – தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்த அன்பு ராஜ் காலப்போக்கில் தான் பெண் என்பதை உணர ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல அவரையும் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஒதுக்கி வைக்க தாய் தேன்மொழி தனது பிள்ளைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதனால்  நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அன்பு ரூபி.இவரின் ஆகிடும் முயற்சி மற்றும் உழைப்பால் தமிழக அரசு அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கௌரவித்துள்ளது.

  ttn

  இதுகுறித்து கூறியுள்ள அன்பு ரூபியின் தாய் தேன்மொழி, ‘மாற்றுப் பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. மகன் மகளாக மாறியதைக்  கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறி வியக்க வைக்கிறார். 

  சாதிப்பதற்கு உழைப்பும் விடாமுயற்சியும் தான் தேவையே தவிர,  பாலினம் என்ற ஒன்று தேவையற்றது என்பதை அன்பு ரூபியும்  அவரது தாய் தேன்மொழியும் மீண்டும் ஒருமுறை இந்த உலகின் முன் பறைசாற்றியுள்ளனர்.