இந்தியாவின் இளம் வேட்பாளர்…ஆரம்பமே அட்டகாசம்..!

  0
  2
  indirani murmu

  அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த் நாயக் செல்வாக்கான ஆள்.அப்படியும் வலுவாக டஃப் கொடுத்திருக்கிறார் சந்திராணி முர்மு

  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதி தவிர்த்து மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடை பெற்றது.இந்த முறை 716 பெண் வேட்பாளர்கள். அதிலும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவிகித முன்னுரிமை கொடுத்திருந்தது.இது இந்தியாவில் வேற எந்தக் கட்சியும் செய்யாத சாதனை.

  பா.ஜ.க 350 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க விருக்கிறது.பெண் வேட்பாளர்களில் 76 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்த வேட்பாளர்களில் மிக குறைந்த வயதில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திராணி முர்மு.ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 25.பி.டெக் பட்டதாரி.

  anand naik

  இவரது தந்தை,சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்.அதனால், இயல்பாகவே இவருக்கும் சமூகத்தின் மீதான ஈடுபாடு அதிகம் இருந்திருக்கிறது.கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்.தேர்தல் அறிவிப்பு வந்தபோது கியோஞ்சர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடச் சொல்லி உறவினர்கள் சொல்ல,பிஜு ஜனதா தளம் சார்பில் களத்தில் இறங்கியிருக்கிறார்.

  ஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த் நாயக் செல்வாக்கான ஆள்.அப்படியும் வலுவாக டஃப் கொடுத்திருக்கிறார் சந்திராணி முர்மு.புது பொண்ணு என்ன பண்ணிட முடியும் என்று எதிர் தரப்பு அசால்ட்டாக இருந்திருப்பார்கள் போல… 66,203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று,நாட்டின் இளம் வேட்பாளர் என்ற பெயரைத் தக்க வைத்திருக்கிறார்.

  indirani murmu

  கடைசி நேரத்தில் களம் இறக்கப்பட்டதால்,தொகுதி மக்களின் உண்மையான பிரச்சினை என்னன்னு கூட தெரியாதாம்,முதல் வேலை தொகுதியின் மூலை முடுக்கு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பார்த்திட்டு ‘அடிச்சு ஆடலாம்’ என்று திட்டம் வைத்திருக்கிறாராம். நீ கலக்கு தாயி…