இந்தியன் 2-வில் வயதான கமலின் மனைவி காஜல் இல்லையாம்… இவர் தானாம்!?

  0
  5
  இந்தியன் 2

    இந்த படத்தை  லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

  இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

  kamal

  முதற்கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டி, ராஜமுந்திரி சிறைச்சாலை, சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்தது.  மேலும்  போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர். இதற்கு 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து  மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான குவாலியரில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்து. அப்போது  கமல் ஹாசன் வயதான கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. 

  priya

  இந்நிலையில் இப்படத்தில் காஜல் அகர்வால் கமல் ஹாசன்  மனைவியாகி 85 வயதான அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் பெரிய டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது  நடிகை சுகன்யா நடித்திருந்த அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் தான் நடிக்கிறாராம். ரகுல் ப்ரீத் சிங்  சித்தார்த் ஜோடியாக  நடிக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.