இந்தியன் 2 பட வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல நடிகை 

  0
  1
  BJP

  சென்னை: இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 

  இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வந்தது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

  படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

  இந்த நிலையில் இதில் சில தினங்களுக்கு முன்பு நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், வித்யுத் என்று இன்னும் ஏராளமானோர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இதிலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனையால் ஐஸ்வர்யா ராஜேஷ் இது போன்று முடிவு எடுத்துள்ளதாக அவரது நெருங்கிய வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஒருவருக்கு ஷங்கர் படத்தில் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் கடினம், அப்படி இருக்கும் சமயத்தில் அந்த வாய்ப்பை இவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.