இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி

  0
  6
  இந்தியன் 2

  கமல் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஊழியர்கள் 3பேர் உயிரிழந்தனர்.                    

  இந்தியன் 2 பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டையில் உள்ள ஈ.வி.எம்.பிலிம் சிட்டியில் இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் டைபெெெற்று வந்தன. அப்போது கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் உதவி இயக்குனர் மற்றும் இருவர் செட் அமைப்பாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் பூந்தமல்லியிில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

   

   

  பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இதுபோன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது திரையுலகினரையே  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.