இந்தியன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?

  0
  5
  rj balaji

  இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

  சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டுவருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

  இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியைப் பிடிக்கும் அதிகாரியாக நெடுமுடிவேணு நடித்திருந்தார். தற்போது ‘இந்தியன் 2’ படத்திலும் நெடுமுடிவேணு அதே கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவருடைய உதவியாளராக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.