இந்தா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கல்ல….. மீண்டும் கருணை மனு தாக்கல்…… இந்த முறை குற்றவாளி வினய் சர்மா

  0
  4
  Nirbhaya case convict

  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார்.

  நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் டெல்லி துணைநிலை ஆளுநனருக்கு புதிதாக கருணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். 

  nirbaya case

  நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் முன்னதாக 3 முறை டெத் வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ஒவ்வொரு முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கும்போதும், குற்றவாளிகளில் ஒருவர் மாற்றி ஒருவர் புதிதாக நீதிமன்றம் அல்லது குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்து தப்பி வந்தனர். இந்நிலையில் அண்மையில் டெல்லி நீதிமன்றம் 4வது முறையாக இம்மாதம் 20ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெத் வாரண்ட் பிறப்பித்தது. குற்றவாளிகளுக்கான அனைத்து சட்டவாய்ப்புகள் முடிந்து விட்டதால் அவர்கள் வரும் 20ம் தேதி கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்பிக்கை இருந்தது. 

  nirbaya case

  ஆனால் வழக்கம் போல் தங்களது தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போடும் நடவடிக்கையில் குற்றவாளிகள் ஈடுபட தொடங்கி விட்டனர். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா டெல்லி துணைநிலை ஆளுநனர் அனில் பைஜால் முன் புதிதாக கருணை மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆக, இந்த முறையும் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேறுவது தள்ளி போகுமோ  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.