இதை செய்யுங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்: அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த திருச்சி மக்கள்!

  0
  2
  திருச்சி காந்தி சந்தை

  மக்களவை தேர்தலை முன்னிட்டு  திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

  திருச்சி: மக்களவை தேர்தலை முன்னிட்டு  திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

  திருச்சியில் அமைந்துள்ள காந்தி சந்தையில் காய்கறி , பழங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் 3 ,000க்கும் மேற்பட்டவை உள்ளன. சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் இதைச் சார்ந்து பிழைத்து நடத்தி வருகின்றனர். 

  gandhi market

  இந்த சந்தையைப் பொலிவுறு மாநகர் திட்டத்தின் கீழ் காந்தி சந்தையைத் திருச்சி – மதுரை சாலை கள்ளிக்குடியில் இடமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டது. இதற்காக 10 ஏக்கரில் ரூ. 77 கோடியில் கட்டுமானம், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுப் பல மாதங்களாகியும் ஒரு கடைக்காரர் கூட அங்கு செல்லாததால், செயல்படாமல்  இந்த சந்தை செயல்படாமல் கிடக்கிறது.

  political party ttn

  இந்நிலையில், காந்தி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர், ‘காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. மூன்று தலைமுறையாக உள்ள இந்த சந்தை பழைய இடத்திலேயே நிரந்தரமாகத் தொடர உறுதியளிக்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு’ என்கிற பிரம்மாண்ட சுவரொட்டிகளை அப்பகுதியில் ஒட்டியுள்ளனர். இதில் அனைத்து கட்சிகளின் கொடி, சின்னத்தை அச்சிட்டுள்ளனர். அதே சமயம், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் கோரிக்கையை ஏற்றால் அந்த கட்சிக்காக வாக்கு சேகரிப்போம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசும் நம் அரசியல் தலைவர்களுக்கு, காந்தி சந்தை வியாபாரிகள் நூதனமான முறையில் செக் வைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.