இதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்!

  0
  3
  ப்ரண்ட்ஸ் - பேமிலி

  நண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரிந்தால், உடனடியாக வேறு டாப்பிக்கை மாத்துங்கள்.

  இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கு பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் நிறையவே குழப்பமாக இருக்கிறார்கள்.நமது வீட்டில் இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அதிலும் உடன் இருப்பவர்கள் மனம் நோகாமல் இருக்கவேண்டியதும் ரொம்ப முக்கியம்.

  நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வெளியிடங்களில் நாம் நடந்துகொள்ளும் முறை மற்றவர்களை முகம் சுழிக்கும் படியாக இருக்கக்கூடாது.அப்படி செய்யக்கூடியதும், செய்யக்கூடாததுமாக இந்தமுறை ஐந்து பாய்ண்டுகளைப் பார்க்கலாம்…

  call

  1.நீங்கள் ஃபோன் செய்தவுடன் ஒருவர் எடுக்கவில்லை என்றால்,மீண்டும்,மீண்டும் அழைக்காதீர்கள்.நீங்கள் ஒருவரை அழைத்தவுடன் ஃபோனை எடுக்க வேண்டும் என்று நினைத்தால்,அவர் டெலிபோன் ஆப்பரேட்டராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.நீங்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தாலும் நீங்கள் அழைக்கும் நபர் டிராவல் செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக ஃபோனை எடுத்து பதில் சொல்ல முடியாது.அவர்கள் உங்களோடு பேசுவதை விட ஏதோ முக்கியமான வேலையில் இருக்கலாம்.அதனால்,அவர்களாக திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள்.மிக அவசரமான தகவலை சொல்லணும் என்றால் வாட்ஸ்அப்பில் செய்தி தட்டிவிடுங்கள்.அவர்கள் உங்கள் செய்தியை பார்த்ததும் அழைப்பார்.

  dsvsv

  2.ஒருவர் எதையாவது தவறி கீழே போட்டுவிட்டாலோ,ஸ்பூனால் சாப்பிட தடுமாறினாலோ அவர்களை உற்றுப் பார்க்காதீர்கள்.இது தும்மும்போதும் இருமும்போதும்,அபானவாயுவை வெளிப்படுத்தும் போதும் அவர்களை கவனிக்காதது போல இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.இதுபோல் ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்து ஒட்டுமொத்த ஜனமும் உங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும்? அதுபோல்தான் மற்றவர்களும்.

  afsdf

  3.எதிர்பாராத விதமாக திடீரென்று ரொம்ப நாள் பார்க்காமல் இருந்த நண்பரை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் சந்திக்கும் நேரத்தைப் பொறுத்து லஞ்சுக்கோ, டின்னருக்கோ அழைக்கிறார்.தவிர்க்க முடியாமல் நீங்களும் போக வேண்டிய சூழல் இருந்தால்,விலையுயர்ந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யாதீர்கள்.அவர்களோட சூழ்நிலை என்னவென்று உங்களுக்கு தெரியாது. அவர்களையே உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யச் சொல்வது இன்னும் சிறப்பு.

  xvffdd

  4.அடிக்கடி நண்பர்களோடு,ஆட்டோவிலோ டாக்ஸியிலோ போக வேண்டிய  சூழல் எல்லோருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதுதான்.அதுபோல் ஹோட்டல், பார்ட்டி என்று போகும்போதும் சரி,அவர்கள் ஒரு முறை பில் கொடுத்தால், அடுத்தமுறை நீங்கள் பில் கொடுப்பதற்கு மறக்க வேண்டாம்.உங்களால் கொடுக்க முடியாத சூழல் இருந்தால்,நீங்கள் அந்த மாதிரியான பயணத்தையே தவிர்த்திடுங்கள்.நண்பர்கள் மத்தியில் மட்டுமல்ல நண்பருடன் வரும்,அறிமுகம் இல்லாத நபர்களிடமும் உங்கள் மீது மரியாதை ஏற்படும்.

  dfs

  5.நண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரிந்தால், உடனடியாக வேறு டாப்பிக்கை மாத்துங்கள்.முடிந்தவரை எல்லோருக்கும் பொதுவான உரையாடலாக இருந்தால் நல்லது.அதைவிட முக்கியம்,நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது யாரவது கருத்து சொன்னால்,அதை கவனமாக காது கொடுத்து கேளுங்கள்.எதிரில் இருப்பவர்களுக்கும் பேச வாய்ப்பு கொடுக்கணும் என்பதை மறக்காதீர்கள்.இல்லையென்றால் மறுபடியும் அப்படியொரு சந்திப்பு நடக்காமல் போவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.