இதைப் படிச்சா வாழ்க்கை முழுக்க வெற்றி தான்…! அடுத்தவருக்கும் ரகசியத்தைச் சொல்லுங்க!

  0
  18
  மாதிரி படம்

  வாழ்க்கையில் வெற்றி என்பது முழுக்க முழுக்க நம் கையில் மட்டும் தான் உள்ளது. நம்முடைய வெற்றியை வேறு எவராலும் தீர்மானிக்க முடியாது. சில எளிய பயிற்சிகளையும், முயற்சிகளையும் செய்து வந்தாலே வாழ்க்கையில் வெற்றி வரத் துவங்கி விடும். அதில் மிக முக்கியமானது ‘பத்து நொடி துணிவு’. அந்த நகரில் மிகப் பிரபலமான நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. கிட்டத்தட்ட 200 பேர் வேலைப் பார்த்து வந்தார்கள்.

  வாழ்க்கையில் வெற்றி என்பது முழுக்க முழுக்க நம் கையில் மட்டும் தான் உள்ளது. நம்முடைய வெற்றியை வேறு எவராலும் தீர்மானிக்க முடியாது. சில எளிய பயிற்சிகளையும், முயற்சிகளையும் செய்து வந்தாலே வாழ்க்கையில் வெற்றி வரத் துவங்கி விடும். அதில் மிக முக்கியமானது ‘பத்து நொடி துணிவு’. அந்த நகரில் மிகப் பிரபலமான நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. கிட்டத்தட்ட 200 பேர் வேலைப் பார்த்து வந்தார்கள். தினமும் ஒரே மாதிரியான வேலையைச் செய்து வந்தால் ஊழியர்களுக்கு அலுப்பு ஏற்படுவது இயற்கை தானே. அந்த மாதிரியான நேரத்தில், அவர்களுக்குப் புத்துணர்ச்சி பெறுவதற்கான பயிற்சியைத் தருவதற்கு அந்நிறுவனத்தின் முதலாளி யோசித்தார். இதற்காக நிறுவனத்தின் அருகிலேயே மனவளப் பயிற்சிகளை அளித்து வந்த பெண்மணியைச் சந்தித்து தனது எண்ணத்தைத் தெரிவித்தார். அந்த பெண் பயிற்சியாளர், இப்போது தான் பயிற்சி தர ஆரம்பித்து இருந்தார். அவரால்  200 பேருக்குப் பயிற்சி அளிக்கும் அளவுக்குத் தான் தயாராகவில்லை என நினைத்தார். எனவே, தயக்கத்துடன் ‘‘என்னால் முடியாது’என்று ஒதுங்கி விட்டார். ஆனால், ஒரு வருடம் கழித்து அவர் மனம் மாறுகிறது. 200 பேருக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கையும் அனுபவமும் வந்து விட்டதாக உணர்கிறார். 

  talk

  இப்போது அந்தப் பெரிய நிறுவன மேலாளருக்கு போன் செய்து கேட்கலாமா, வேண்டாமா? அவர் தன்னை நினைவு வைத்திருப்பாரா, மறந்திருப்பாரா? அவரிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கித் தயங்கியே ஒரு மணி நேரம் போகிறது பயிற்சியாளருக்கு. சட்டென்று போனை எடுத்து ‘கேட்டுத் தான் பார்க்கலாமே’ என்று கேட்க, அந்த மேலாளர் இந்தப் பயிற்சியாளரை நினைவு வைத்திருந்து, வாய்ப்பும் கொடுக்கிறார். அந்த சட்டென்று போனை எடுத்து கேட்டுத்தான் பார்க்கலாமே என்ற ஃபிளாஷ் முடிவையே ‘பத்து நொடி துணிவு’ என்கிறார்கள். 
  ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த ‘பத்து நொடி துணிவு’ மனதில் வந்தால், நிறைய சாதிக்கலாமாம். நம்மில் பலரும் பெரும்பாலும் ஒரு விதமான, பாதுகாப்பான சூழலில் இருக்கத் தான் ஆசைப்படுவோம். ஒரு நாளில் இரண்டு தடவை ‘பத்து நொடி துணிவு’கொண்டு அந்தப் பாதுகாப்பான சூழலின் எல்லையை மீறினால், எளிதாக முன்னேறி விடுவோமாம். 
  பஸ்ஸில் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரிக்கக் கூச்சப்பட்டு எத்தனை முறை தேவையில்லாமல் நம் ஸ்டாப்பை விட்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்திருப்போம். கடன் கேட்க, கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க, ஆபீஸில் சம்பள உயர்வு கேட்க, புது வேலைக்குப் போகும் போது சம்பளம் தொடர்பாக பேரம் பேச, இப்படி பல இடங்களில் இந்த ‘பத்து நொடி துணிவு’ வந்திருந்தால், பலரின் வாழ்க்கையே மாறியிருக்கும்.  யோசியுங்கள்… தயக்கக் கூண்டை உடைத்து வெளியில் வாருங்கள்… ‘பத்து நொடி துணிவு’ கொள்ளுங்கள்!