இதே வேகத்தில் கொரோனா பரவினால்…… இன்னும் ஒரு வாரத்துக்குள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விடும்….

  0
  3
  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

  தற்போதைய வேகத்தில் கொரோனா வைரஸ் பரவினால், நம் நாட்டில் இன்னும் ஒரு வாரத்துக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விடும் என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

  தொற்று நோயான கொரோனா வைரஸ் உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகின் வல்லரசான அமெரிக்கா கூட இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகிறது. இந்தியாவில் தொடக்கத்தில் பெரிய அளவில் இல்லாமல் இருந்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ்

  இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். ஒவ்வொரு 4  நாட்களுக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதே வளர்ச்சி வேகத்தில் சென்றால் ஏப்ரல் 14ம் தேதி முடிவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டும்.

  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

  கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்த எடுத்து கொண்ட காலம்

  மார்ச் 15-20                5 நாட்கள்
  மார்ச் 20-39                3 நாட்கள்
  மார்ச் 23-19                6 நாட்கள்
  மார்ச் 29- ஏப்ரல் 2    4 நாட்கள்
  ஏப்ரல் 2- 6                 4 நாட்கள்