இதெல்லாம் செஞ்சீங்கன்னா உங்க வீட்ல செல்வம் பெருகும்

  0
  14
  உப்பு

  புதிதாக ஒரு இடத்திற்கு குடிபுகும் பொழுது, அது வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த வீடாக இருந்தாலும் சரி… அந்த வீட்டிற்குள் முதன் முதலில் கொண்டு செல்ல வேண்டியப் பொருள் உப்பு. மகாலட்சுமியின் அம்சமான உப்பையும், அம்மனின் அம்சமான மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கிழங்கையும், ஒரு குடத்தில் தண்ணீரையும், குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.

  stone salt

  எந்த இடத்தில் நுழைந்ததும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறதோ, நறுமணங்கள் கமழ்கிறதோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15-க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15-க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15-க்குள்ளும் கடையில் உப்பை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவாவது உப்பைத் தொடர்ந்து வாங்கிவர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும். உப்பை வாங்கும் பொழுது, கல் உப்பாக வாங்க வேண்டும்.கல் உப்பு தான் மகாலட்சுமியின் அம்சமாகும். 

  stone salt

  அழுக்குத் துணிகள் வீட்டின் மூலை முடுக்கில் எல்லாம் இறைந்து கிடக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்குவதில்லை. தங்குவதில்லை என்று சொல்வதை விட, அந்த வீட்டிற்குள் மகாலட்சுமி நுழையவே விரும்புவதில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் குடியிருக்கும் வீட்டை தண்ணீரால் தூய்மைப்படுத்துங்கள். 

  அதன் பின்னர், வீட்டில் உள்ளப் பொருட்களை சுத்தமாக அடுக்கி வைத்தால், அந்த இடத்தில் மகாலட்சுமி வர ப்ரியப்படுவாள். அங்கெல்லாம்  செல்வம் குவியும்.

  மிக முக்கியமாக, எப்பொழுதுமே அபசகுணமாக வார்த்தைகள் ஒலிக்கும்  இடங்களில் தனலட்சுமி வர விரும்புவதில்லை. எங்கெல்லாம் விட்டுக்  விட்டுக் கொடுத்தலும், இனிய வார்த்தைகளும் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

  lemon

  கோயிலுக்குச் செல்லும் பொழுது, வாங்குகிற குங்குமத்தையும், எலுமிச்சைப் பழத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் அந்த வீட்டில் நிம்மதியும், செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.