இது தர்பாருக்கு மட்டுமல்ல பராசக்தியிலிருந்தே இருக்கு – கமல்ஹாசன் அதிரடி 

  0
  7
  Kamalhassan

  தர்பார் படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

  தர்பார் படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள கட்சியின் 3 வது மாநில தலைமை அலுவலகத்தை கட்சி கொடியேற்றி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சினேகன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

  Kamalhassan

  நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது குறித்து எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. மக்களைத் தேடி நான் வர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெற்றிடத்தை நிரப்ப சரியான தலைமை வேண்டும். திரைப்படங்களில் வசனம் நீக்குவது என்பது பராசக்தி காலத்தில் இருந்தே இருக்கிறது.  யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.