‘இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்’.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்!!

  0
  5
  சவுதி அரேபியா

  சவுதி அரேபியா மீது எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  அண்மையில் சவுதி அரேபியாவிலுள்ள அப்காய்க் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சில எண்ணெய் கிணறுகளிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் சுமார் 5 மில்லியன் அளவிலான பீப்பாய்கள் எரிந்தன. அதேபோல் தினமும் 5.7 மில்லியன் பீப்பாய்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் வேலையும் முற்றிலும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. 

  saudi

  உலகில் 10% கச்சா எண்ணெயின் அளவை பூர்த்தி செய்யும் சவுதி அரேபியாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், கச்சா எண்ணெய் சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 12 சதவீதம் அளவிலான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  ஏமன் நாட்டில் ஈரான் அரசின் பக்க பலத்துடன் அங்குள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி அந்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்குவதற்கும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் ஏமன் அரசு தொடர்ந்து ராணுவ தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு நேசநாடான சவுதி அரேபியா தங்கள் ராணுவத்தை கொடுத்து உதவி வருகிறது. 

  saudi

  இதனால் ஆத்திரமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை விடுத்து, இந்த ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். 

  இந்த தாக்குதல் குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களால் சவுதி அரேபியாவை தாக்க முடியும். அதை அந்நாட்டு அரசிற்கு உறுதியாக தெளிவுபடுத்த விரும்புகிறேன் என எச்சரிக்கை விடுத்தார்.