இது இந்தியாவா இல்ல ஹிந்தி -யாவா? அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஸ்டாலின் கண்டனம்

  0
  1
  MK Stalin

  ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இன்று ஹிந்தி தினத்தையொட்டி, மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசினாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு, ஆனால் இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். அதனால் அனைவரும் தனது தாய் மொழியோடு சேர்த்து ஹிந்தியையும் கற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஹிந்தியே நம் நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் அப்போது தான் நாம் உலக நாடுகளிடையே இந்தியாவை அடையாளப் படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

  இதற்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எப்படியாவது, எந்த வழியில் ஆவது தமிழ்நாட்டிற்க்குள் ஹிந்தியை புகுந்து விட மத்திய அரசு துடிக்கிறது என்று உள்துறை  அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது இந்தியாவா இல்ல ஹிந்தி -யாவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.