இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு 1,96,39,239 பேருக்கு விநியோகம் : தமிழக அரசு

  0
  1
  பொங்கல் பரிசு

  பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 

  பொங்கல் பரிசு கடந்த 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. 4 நாட்கள் விநியோகம் நடந்தும், சில மக்கள் வாங்காததால் அதற்கு மறுநாள் அதாவது 14 ஆம் தேதியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 

  ttn

  அதில், ” அனைத்து அரிசி பெறும் அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. விடுபட்ட அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதி வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் சில மக்கள் வாங்காததால் வரும் 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 

  ttn

  இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 98.5% மக்கள் பொங்கல் பரிசு பெற்றுள்ளதாகவும், நேற்று இரவு வரை 1,96,39,239 ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.