இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் பார்த்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா….

  0
  2
  முகேஷ் அம்பானி

  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,583.36 கோடி ஈட்டியுள்ளது. இந்த வங்கி இதுவரை எந்தவொரு காலாண்டிலும் இந்த அளவுக்கு லாபம் ஈட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு (2019 அக்டோபர்- டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. இதுவரை எந்தவொரு காலாண்டிலும் இல்லாத அளவுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,583.36 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 41.17 சதவீதம் அதிகமாகும்.

  எஸ்.பி.ஐ.

  2019 டிசம்பர் காலாண்டில் ஸ்டேட் பேங்க் இந்தியாவின் நிகர வட்டி வருவாய் 22.42 சதவீதம் அதிகரித்து ரூ.27,778.79 கோடியாக உயர்ந்துள்ளது.மேலும் இந்த வங்கியின் வாராக் கடன் நிலவரமும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன் 3.95 சதவீதத்திலிருந்து 2.65 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் 8.71 சதவீத்திலிருந்து 6.94 சதவீதமாக குறைந்துள்ளது.

  எஸ்.பி.ஐ.

  அதாவது மொத்த வாராக் கடன் ரூ.1.88 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.59 லட்சம் கோடியாகவும், நிகர வாராக் கடன் ரூ.80,943 கோடியிலிருந்து ரூ.58,248 கோடியாகவும் குறைந்துள்ளது.