இதுவரை அவர் 24 முதல்வர்களை மாற்றி இருக்க வேண்டும்.. ராகுலை கலாய்த்த சிவராஜ் சிங் சவுகான்….

  0
  3
  disha patani

  விவசாய கடனை தள்ளுபடி செய்யாததால், இதுவரை அவர் 24 முதல்வர்களை மாற்றி இருக்க வேண்டும் என காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கிண்டல் செய்தார்.

  மத்திய பிரதேசம் மாநிலம் அகர் மால்வாவில் நேற்று பா.ஜ. சார்பில் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது: கடந்த ஆண்டு மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில், ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை ஆட்சிக்கு வந்த 1,2,3,4,5…..10 நாட்களில் தள்ளுபடி செய்வோம். குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால் முதல்வரை மாற்றி விடுவேன் என ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்து இருந்தார்.

  சிவராஜ் சிங் சவுகான்

  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் தாண்டி விட்டது. சொன்னப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றததால் அவரது கணக்குபடி இதுவரை குறைந்தபட்சம் 24 முதல்வர்களை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர் முதல்வரை மாற்றவில்லை. அதற்கு பதிலாக ராகுல் பாபா தன் பதவியை (காங்கிரஸ் தலைவர்) தானே ராஜினாமா செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.

  விவசாயம்

  மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். விவசாய கடன்கனை தள்ளுபடி செய்வோம் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை குறிப்பிட்டுதான் சிவராஜ் சிங் சவுகான் அவரை கிண்டல் செய்தார்.