இதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா…அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..!? 

  0
  1
  பிரதமர் ஸ்காட் மோரிசன்

  ஆஸ்த்திரேலியாவில் கடந்த சனியன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததால் இந்தத் தேர்தலை ‘ கிளைமேட் சேஞ்சிங் எலக்‌ஷன் ‘ என்று அழைத்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

  exitpoll

  அங்கே வாக்காளராக பதிவு செய்துகொண்டவர் வாக்களிக்காவிட்டால் நம்ம ஊர் காசுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.ஆகவே 16 மில்லியன் பேருமே சின்சியராக ஓட்டுப்போட்டார்கள்.

  உடனே ஆஸ்திரேலிய மீடியாக்கள் களத்தில் குதித்து எக்ஸிட் போல் நடத்தினார்கள்.அதில் இப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்கும் என்றும் லேபர் பார்ட்டி கூட்டணிதான் ஜெயிக்கப்போகிறது என்றும் ஆரூடம் சொன்னார்கள்!

  ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டதும் கதை தலைகீழாகிவிட்டது. ஆஸ்த்திரேலிய பார்லிமெண்டில் மொத்த இடங்கள் 151.தனி மெஜாரிட்டி கிடைக்க 76 இடங்கள் தேவை.இதில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்களே கிடைத்தன.ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 74 இடங்கள் ! இதைத்தொடர்ந்து ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஸ்காட் மோரிசன் மீண்டும் பிரதமராகிறார்

  morrision

  வெறும் ஒரு கோடியே அறுபது லட்சம் பேர் கொண்ட நாட்டிலேயே எக்ஸிட் போல் லட்சனம் இதுதான்.இங்கே 100 கோடிபேர் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள், யாரும் ஓவராக பொங்காமல் உஷாராகப் பேசுவதே நல்லது!